பொன்னம்மாபேட்டையில்2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்பெண் தப்பி ஓட்டம்


பொன்னம்மாபேட்டையில்2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்பெண் தப்பி ஓட்டம்
x

பொன்னம்மாபேட்டையில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகிறார்கள்.

சேலம்

சேலம்,

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் உள்ள அரிசி ஆலையில் நேற்று ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக சேலம் உணவு பொருள் வழங்கல்துறை பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பறக்கும் படை தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் குமார், சங்கர் கணேஷ் மற்றும் அலுவலர்கள் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் கோவிந்த கவுண்டர் காடு பகுதியில் உள்ள அரிசி ஆலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், ஒரு டன் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விறபனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை உணவு பொருள் வழங்கல்துறை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த வேடியப்பன் என்பவரின் மனைவி பரிமளா (வயது 45) என்பவர், அரிசி அரைக்கும் மில்லை நடத்தி வந்ததும், அவர், பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை மாவாக்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. உணவு பொருள் வழங்கல்துறை பறக்கும் படையினர் வருவதை அறிந்த பரிமளா அரிசி அரைக்கும் மில்லில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story