சரக்கு வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சரக்கு வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது ெதாடர்பாக டிரைவரை கைது செய்தனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சரக்கு வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது ெதாடர்பாக டிரைவரை கைது செய்தனர்.

ரோந்து பணி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கண்டிதம்பேட்டை அருகே பரவாக்கோட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த வேனில் 2 டன் அளவிலான 75 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அரிசி மூட்டைகளுடன் மினிவேனையும், டிரைவரையும் பரவாக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை

விசாரணையில் வேன் டிரைவர் உள்ளிக்கோட்டை எம்.ஜி.ஆர்.காலனி பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 43) என்பதும், ரேஷன் அரிசியை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து பரவாக்கோட்டை போலீசார் ரேஷன் அரிசியுடன் சரக்கு வேன் மற்றும் சரவணனை திருவாரூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இதுதொடர்பான குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தும், இதேபோல் நேற்று முன்தினம் திருவாரூர் அருகே ஆற்றில் கொட்டப்படடிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.


Next Story