ஆரல்வாய்மொழி அருகே காரில் கடத்த முயன்ற2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆரல்வாய்மொழி அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ெசய்யப்பட்டது.
அழகியபாண்டியபுரம்:
குமரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையில் துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் அனில்குமார் ஆகியோர் நேற்று ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் அந்த காரை விரட்டிச் சென்றனர். அப்போது சிறிது தூரம் சென்றதும் காரை அந்த டிரைவர் சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது, காரின் பின்பகுதியில் சிறு, சிறு மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கார் டிரைவர் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---