கோவில்பட்டி மந்திதோப்பில்பதுக்கி வைக்கப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கோவில்பட்டி மந்திதோப்பில்பதுக்கி வைக்கப்பட்ட 2 டன்   ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி மந்திதோப்பில்பதுக்கி வைக்கப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி மந்திதோப்பில் பதுக்கி வைக்கப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு மந்தித்தோப்பு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், ஏட்டுக்கள் கந்தசுப்பிரமணியன், பூலையா நாகராஜன் ஆகியோர் கோவில்பட்டி மந்தித்தோப்பு பத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

பறிமுதல்

அப்போது அங்கு 50 கிலோ எடை கொண்ட 42 சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை சோதனை செய்தபோது, மொத்தம் 2 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேஷன் அரிசியை மந்தித்தோப்பை சேர்ந்த வெயில்காளை என்பவர் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


Next Story