அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்


அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல்
x

அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள கண்மாயில் அனுமதி இல்லாமல் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருவதாக தாசில்தார் செந்தில் வேல்முருகனுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரது தலைமையில், துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிய 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து திருவாடானை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story