தேசிய நெடுஞ்சாலையில் 2 மரங்கள் விழுந்தன


தேசிய நெடுஞ்சாலையில் 2 மரங்கள் விழுந்தன
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-மைசூரு இடையே தேசிய நெடுஞ்சாலையில் 2 மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-மைசூரு இடையே தேசிய நெடுஞ்சாலையில் 2 மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரங்கள் விழுந்தன

கூடலூரில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவிற்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் தினமும் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக கூடலூர் நகரில் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மார்தோமா நகரில் நேற்று மதியம் 2 மணிக்கு மேடான பகுதியில் இருந்த 2 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அகற்றும் பணி

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையின் குறுக்கே கிடந்த மரங்களை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மரங்கள் விழுந்ததால் கர்நாடகா, தமிழகம், கேரளா என 3 மாநிலங்களுக்கு இடையே வாகனங்கள் இயக்கப்படவில்லை. சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. பின்னர் அனைத்து வாகனங்களும் புறப்பட்டு சென்றது.


Next Story