ரூ.60 லட்சத்தில் 2 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள்


ரூ.60 லட்சத்தில் 2 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள்
x

ரூ.60 லட்சத்தில் 2 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி கோணமேடு பகுதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர மன்ற துணைத் தலைவர் கையாஸ் அஹமத் தலைமை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் பானுப்பிரியா வெங்கடேசன், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் சங்கர் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார் கலந்து கொண்டு நகர்ப்புற துணை சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

இதே போல் பஷீராபாத் கே.கே.முதல் தெருவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற துணை சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதிகுமார் பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Next Story