தக்கலை அருகே செம்மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
தக்கலை அருகே செம்மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்
தக்கலை:
தக்கலை அருகே செம்மண் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு
திக்கணங்கோடு கிராம நிர்வாக அலுவலர் விமல் திக்கணங்கோடு அருகே உள்ள கொல்லாய் பகுதியில் ்சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள நிலத்தில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண்ணை டெம்போவில் ஏற்றி கொண்டிருந்தனர். கிராம நிர்வாக அலுவலரை பார்த்ததும் செம்மண் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களில் நங்கச்சிவிளையை சோ்ந்த ரதீஸ் (40) என்பவரை கிராம நிர்வாக அலுவலர் பிடித்தார். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவர் தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செம்மண் கடத்த பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் டெம்போ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ரதீஸ் மற்றும் தப்பியோடிய டெம்போ டிரைவர் மைலோடு பகுதியை சோ்ந்த சுரேஷ் (42) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.