தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி ஊராட்சி வாக்காளர்களுக்கு 2 ஓட்டுகள்- 9-ந் தேதி வாக்களிக்கிறார்கள்


தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி ஊராட்சி வாக்காளர்களுக்கு 2 ஓட்டுகள்- 9-ந் தேதி வாக்களிக்கிறார்கள்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தொண்டைமான் ஊரணி, தென்னங்குடி ஆகிய 2 ஊராட்சிகளை சேர்ந்த வாக்காளர்கள் 2 ஓட்டுகளை 9-ந் தேதி பதிவு செய்ய உள்ளனர்.

புதுக்கோட்டை

மாவட்ட கவுன்சிலர் பதவி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் 7-வது வார்டு பதவி, வெட்டுக்காடு, மேலப்பட்டு, நெடுங்குடி, தென்னங்குடி, தொண்டைமான் ஊரணி ஆகிய 5 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், செங்கீரை ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் வருகிற 9-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு புதுக்கோட்டை, குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமத்தினர் வாக்களிக்கின்றனர்.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சோத்துப்பாளை, வளவம்பட்டி, கல்லுக்காரன்பட்டி, காந்திபுரம், தொண்டைமான் ஊரணி, வானரப்பட்டி, ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி, குப்பையான்பட்டி, வாராப்பூர், பெருங்களூர், செம்பாட்டூர், புத்தாம்பூர் ஆகிய ஊராட்சிகளிலும் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

2 ஓட்டுகள் பதிவு

இதேபோல் குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, உப்பிலியாக்குடி, வாழமங்களம், வத்தனாக்குறிச்சி, செனையக்குடி, அண்டக்குளம், பெரியதம்பி உடையான்பட்டி, மூட்டாம்பட்டி, வைத்தூர், தென்னங்குடி ஆகிய ஊராட்சிகளிலும் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த ஊராட்சி ஒன்றியங்களில் தொண்டைமான் ஊரணி மற்றும் தென்னங்குடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் மட்டும் ஒருவர் 2 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

அதாவது ஒன்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கும், மற்றொன்று அந்தந்த ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலுக்கும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு இந்த 2 ஊராட்சிகளில் ஒரு வாக்காளர் 2 ஓட்டுப்போட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் பகுதி மாவட்ட கவுன்சிலர் வார்டு பகுதியில் வரவில்லை. அதனால் அந்த ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் தலைவர் பதவிக்கான வாக்கினை மட்டுமே பதிவு செய்வார்கள்.


Next Story