ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது
ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது
பெருமாநல்லூர்,
கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருட்டு
பெருமாநல்லூர் அருகே உள்ள பூலுவபட்டியை சேர்ந்தவர் சுப்பராயன் (வயது52). இவரது மனைவி மீனாட்சி (49). இவர்கள் இருவரும் பனியன் தொழிலாளிகள். இந்த நிலையில் மீனாட்சி நேற்று முன்தினம் பாண்டியன் நகரிலில் இருந்து பெருமாநல்லூர் செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏறினார். அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு கணக்கம்பாளையம் பிரிவுக்கு வந்து நின்றது. அந்த நிறுதத்தில் 2 பெண்கள் பஸ்சில் ஏறினர். அவர்கள் மீனாட்சி அமர்ந்திருந்த இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்தனர்.
பஸ் பெருமாநல்லூர் நால்ரோடு பஸ் நிறுத்தம் வந்ததும், அந்த பெண்களும், மீனாட்சியை தள்ளிக்கொண்டு கீழே இறங்கியுள்ளனர். அவர்களை தொடர்ந்து பஸ்சில் இருந்து இறங்கிய மீனாட்சி கைப்பையை பார்த்த போது அதில் இருந்த ரூ.750, செல்போன் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதனை தொடர்ந்து மீனாட்சி பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செயத போலீசார், விசாரணை மேற்கொண்டனர். மேலும் நால்ரோடு சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது 2 பெண்கள் மீனாட்சி கைப்பையில் இருந்து திருடும் காட்சி பதிவாகி இருந்தது.
2 பெண்கள் கைது
அந்த 2பெண்களும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள்
காரியாபட்டியை சேர்ந்த காமாட்சி (40), காளி (20) என்பதும் அவர்கள்தான் மீனாட்சியும், பணம் மற்றும் செல்போனை திருடியதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ் பணம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.