விற்பனைக்காக சாராயம் வைத்திருந்த 2 பெண்கள் கைது


விற்பனைக்காக சாராயம் வைத்திருந்த 2 பெண்கள் கைது
x

விற்பனைக்காக சாராயம் வைத்திருந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, காரியானூரில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை பாக்கெட் போட்டு விற்பனைக்காக வைத்திருந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள், சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அருள்பாண்டியனின் மனைவி தனம் என்ற தனலெட்சுமி (வயது 32), காரியானூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமியின் மனைவி பவுனாம்பாள் (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 11 லிட்டர் 300 மில்லி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.


Next Story