மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது
நெல்லை அருகே கோவில் விழாவில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செப்பறை கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 6-ந்தேதி நிகழ்ச்சியில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த தங்கம்மாள் (வயது 70) என்பவர் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த 4¾ பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து தங்கம்மாள் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்- இன்ஸ்பெக்டர் செல்லத்தங்கம் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்த சத்யா மனைவி மாரி (30), முத்தப்பன் மனைவி லலிதா (27) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story