2 பெண்கள் தற்கொலை


2 பெண்கள் தற்கொலை
x

வேடசந்தூர், செந்துறை பகுதியில் 2 பெண்கள் தற்கொலை செய்தனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள ஒட்டநாகம்பட்டிபுதூரை சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 27). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினையால் கணவரை பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் ரஞ்சிதா வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல செந்துறை அருகே உள்ள மல்லைநாயக்கன்பட்டியை சேர்ந்த சகாதேவன் மனைவி மகேஸ்வரி (31). கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகேஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story