நிழற்குடையில் பஸ் மோதி 2 பெண்கள் படுகாயம்
நிழற்குடையில் பஸ் மோதி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ராமசாமி நகரில் உள்ள தனியார் பஞ்சாலை நிறுவனத்திற்கு பணி மேற்கொள்வதற்காக செம்பட்டி, வடபாலை, தென்பாலை ஆகிய கிராமங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பணியாளர்களை ஏற்றிகொண்டு மில் பஸ் வந்து கொண்டிருந்தது. திருச்சுழி சாலையில் வந்து கொண்டிருந்த போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பயணிகள் நிழற்குடையில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பணிக்கு சென்ற செம்பட்டியை சேர்ந்த புஷ்பம், வைஷ்ணவி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் லேசான காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து சித்தலகுண்டுவை சேர்ந்த ஓட்டுனர் ராமநாதன் (வயது 54) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.