பஸ்சில் பயணியிடம் சங்கிலி திருட முயன்ற 2 பெண்கள் சிறையில் அடைப்பு


பஸ்சில் பயணியிடம் சங்கிலி திருட முயன்ற 2 பெண்கள் சிறையில் அடைப்பு
x

பஸ்சில் பயணியிடம் சங்கிலி திருட முயன்ற 2 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெரம்பலூர்

பஸ்சில் பயணியிடம் சங்கிலி திருட முயன்ற 2 பெண்கள் சிறையில் அடைப்புபெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வி.களத்தூருக்கு சம்பவத்தன்று ஒரு அரசு டவுன் பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. எசனை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பஸ்சில் பயணம் செய்த வேப்பந்தட்டை தாலுகா, நெய்குப்பை காலனி தெருவை சேர்ந்த பொன்னுச்சாமியின்(வயது 42) சட்டை பையில் இருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலியை 2 பெண்கள் திருட முயன்றனர். இதனை கண்டு சுதாரித்து கொண்ட பொன்னுச்சாமி சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு சக பயணிகள் உதவியுடன் 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்தார். பின்னர் பயணிகள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து பெரம்பலூர் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சந்தைப்பேட்டையை சேர்ந்த பகவதியின் முதல் மனைவி மாரி (36), 2-வது மனைவி சித்ரா (29) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 ேபரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து மாரி, சித்ராவை போலீசார் கைது செய்து, திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.


Next Story