வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் பலி
வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பரங்குன்றம்
வெவ்வேறு விபத்துகளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெண் சாவு
திருப்பரங்குன்றம் அருகே உச்சப்பட்டி மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் மனோன்மணி (வயது 31). இவர் தோப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சமையல் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் கரடிக்கல்-கூத்தியார்குண்டு சாலையில் வந்து கொண்டிருந்தார். மூணாண்டிபட்டி அருகே சென்றபோது திடீரென மனோன்மணி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மனோன்மணி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
திருமங்கலம் அருகே மேலக்கோட்டை ராயபாளையம் இடையே நேற்று மாலை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.