காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கரைப்பட்டியை சேர்ந்தவர் அஜித். இவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, சிருவஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேகா (வயது 21) என்பவரை முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 ஆண்டுகளான நிலையில் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்துக்குள்ளாகி சுரேகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சுரேகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுரேகாவின் தாய் ரமாமணி கொடுத்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.