இ-ஆபிஸ் செயல்படுத்துவதில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது


இ-ஆபிஸ் செயல்படுத்துவதில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது
x

இ-ஆபிஸ் செயல்படுத்துவதில் திருப்பத்தூர் மாவட்டம், மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர்

இ-ஆபிஸ் செயல்படுத்துவதில் திருப்பத்தூர் மாவட்டம், மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

நலத்திட்டங்கள்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசின் கீழ் மாவட்ட நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா, இந்திய அரசின் புது டெல்லி தலைமைச் செயலகத்தில் பணிபுரிகின்ற 8 பிரிவு அலுவலர்களுக்கு விளக்கமளித்தார்.

அப்போது மாவட்டத்தில் 4 தாலுகாக்கள், 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்களில் 208 ஊராட்சிகள், 195 வருவாய் கிராமங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.

2-வது இடம்

மாவட்டத்தில் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் நடத்தப்பட்டு அதில் வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அது போன்று இதுவரை 48 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. இ-ஆபிஸ் செயல்படுத்துவதில் திருப்பத்தூர் மாவட்டம் மாநிலத்தில் 2-வது இடத்தை பிடித்துள்ளது என கூறினார்.

மேலும் இந்திய அரசின் புது டெல்லி தலைமைச் செயலகத்தில் பணிபுரிகின்ற 8 பிரிவு அலுவலர்கள் வருகின்ற 16-ந் தேதி வரை பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலகத்திலும் களத்திற்கும் சென்று பார்வையிட உள்ளனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story