விபத்து வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை


விபத்து வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
x
திருப்பூர்

அவினாசி:விபத்து வழக்கில் வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

சேலத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன் அசோக் (வயது 30). இவரும் இவரது உறவினர்கள் பிரேமா (50) தர்மேஷ் (4) ஆகியோர் ஒரு வேனில் கடந்த 22-2-2017 அன்று குருவாயூர் கோவிலுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் அவினாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே வந்தபோது சாலையின் மையத்தடுப்பில் எதிர்பாராதவிதமாக அவர்கள் வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரேமா மற்றும் தர்மேஷ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை அவினாசி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் முடிவில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு செய்ததாக அசோக்குக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கே.எஸ்.சபீனா தீர்ப்பு வழங்கினார்.


Next Story