2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிப்பு கூடியிருக்கிறது-அமைச்சர் துரைமுருகன் பேச்சு


2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிப்பு கூடியிருக்கிறது-அமைச்சர் துரைமுருகன் பேச்சு
x

2 ஆண்டு ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிப்பு கூடியிருக்கிறது என்று சேலத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

சேலம்

அமைச்சர் துரைமுருகன்

சேலம் மாவட்டம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

எனக்கு சேலம் புதிது அல்ல. 1962-ம் ஆண்டில் இருந்து இந்த மாவட்டத்தில் எனது காலடி படாத இடம் கிடையாது. வீரபாண்டி ஆறுமுகம் காலத்தில் என்னை எல்லா பகுதிக்கும் அழைத்து வந்துள்ளார். நான் எத்தனையோ விழாக்கள், மாநாடுகளை பார்த்திருக்கிறேன்.

இன்று காலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் சிலையை திறக்க அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது, வழிநெடுகிலும் மக்கள் எழுச்சியோடு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை.

மதிப்பு கூடியிருக்கிறது

மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். தளபதி, தளபதி என்று சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் போட்டி போட்டிக்கொண்டு கூறியதை பார்த்தால் 2 ஆண்டு தி.மு.க ஆட்சியின் சாட்சியாகவும், சாதனையாகவும் காட்டுகிறது. எந்த ஒரு பொருளை வாங்கினாலும் மறுநாள் விற்றால் அதன் மதிப்பு குறைந்துவிடும். ஆனால் 2 ஆண்டு கால ஆட்சியில் அவரது மதிப்பு குறையவில்லை. மாறாக முதல்-அமைச்சரின் மதிப்பு கூடியிருக்கிறது. அதற்கு இந்த மேடையில் இருக்கும் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட பாராட்டி இருக்கிறார்கள்.

ஆட்சிையயும், கட்சிையயும் ஒருசேர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி செல்கிறார். 50 ஆண்டுகள் கட்சியை நடத்திய கலைஞரின் ரத்தத்தில் உதித்தவர் முதல்-அமைச்சர். இவ்வளவு கட்டுக்கோப்பாக யாரும் கட்சியை நடத்த முடியாது. இந்தியாவிலேயே தி.மு.க.வை போல் இவ்வளவு கட்டுக்கோப்பான கட்சி இல்லை. ஆட்சியையும், கட்சியையும் ஒருசேர வழிநடத்தும் நம் முதல்-அமைச்சர் போற்றுதலுக்குரியவர். இந்த ரேஞ்சில் ஆட்சியை நடத்தினால் 25 ஆண்டு வெள்ளி விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடுவார்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

அமைச்சர் கே.என்.நேரு

முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

2 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் 24-வது இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.14,701 கோடி ஜல்ஜீவன் திட்டத்திற்காக செயல்படுத்தியதின் காரணமாக அந்த திட்ட செயலாக்கத்தில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

2 ஆண்டு ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிப்பு கூடியிருக்கிறது என்று சேலத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

தென் மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. சேலம் மாநகரில் ரூ.528 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டம், சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ.20 கோடியில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story