2 வாலிபர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை


2 வாலிபர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை
x

மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் 2 வாலிபர்களுக்கு 5 மாதத்தில் தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ஆற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அஜித்குமார் (வயது 23), சூர்யா (19). இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிள் திருடிய வழக்கில் ஆற்காடு டவுன் போலீசாரால் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில் அஜித் குமார் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story