வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு ரப்பர் கழக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு ரப்பர் கழக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நாகர்கோவில்,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு ரப்பர் கழக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
வருமானத்துக்கு அதிகமாக...
நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் சிவனய்யா (வயது 62). இவர் கடந்த 2002-ம் ஆண்டு குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிவனய்யா மீது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.
2 ஆண்டு சிறை
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மாயகிருஷ்ணன், குற்றம் சாட்டப்பட்ட சிவனய்யாவை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
அதோடு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிவனய்யா தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.