மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் 2 ஆண்டு சிறை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு நிறுவனங்கள் நடத்தும் மகளிர் விடுதிகள், கல்லூரி மாணவி விடுதிகள், அரசு சாரா நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ஜவுளிக்கடைகள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள், தனி நபரால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் தற்காலிகமாக நடத்தப்படும் விடுதிகளை வருகிற 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு உரிமம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசின் tnswp.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்திதற்கான 2 நகல்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து ஈரோடு கலெக்டா் அலுவலகத்தில் 6-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டணையும், அபராதமும் விதிக்கப்படும்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.