பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை


பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை
x

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள சேவகன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவர், 19 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதைப்பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் தாய் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு ஆலங்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்பாரதி, சக்திேவலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


Next Story