டிரைவருக்கு 2 ஆண்டு சிறை


டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
x

டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே உள்ள திருவிடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கோலப்பா பிள்ளை (வயது 81). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி வில்லுக்குறி பஸ் நிறுத்தத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக பளுகல் பகுதியை சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ் கோலப்பா பிள்ளை மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு இரணியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நீதிபதி அமிர்தீன், விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ரமேசுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு வழக்கீலாக ஸ்ரீதேவி வாதாடினார்.


Next Story