விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய 2 வாலிபர்களுக்கு 2½ ஆண்டு சிறை


விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய 2 வாலிபர்களுக்கு 2½ ஆண்டு சிறை
x

விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய 2 வாலிபர்களுக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சங்ககிரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சேலம்

சங்ககிரி:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா படைவீடு கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பா (வயது 95). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 10-ந் தேதி ஐ.சி.எல். பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது குமாரபாளையம் தனக்கன்காடு பகுதியை சேர்ந்த பாலகுமாரன் (வயது 22) ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பாப்பா மீது மோதியது. இந்த விபத்தில் பாப்பா உயிரிழந்தார். சங்ககிரி போலீசார் பாலகுமாரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு சங்ககிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.பாபு, வாலிபர் பாலகுமாரனுக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரமும் அபராதமும் விதித்தார்.

சங்ககிரி அருகே சன்னியாசிபட்டி பவர் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் கடந்த ஆண்டு மே மாதம் 17-ந் தேதி பவர் ஆபீஸ் அருகே கார் மோதி பலியானார். இதையடுத்து காரை ஓட்டி வந்த வாலிபர் நந்தகோபாலை (27) போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.பாபு, நந்தகோபாலுக்கு 2½ ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.


Next Story