இளம்பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 2 ஆண்டு சிறை


இளம்பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 2 ஆண்டு சிறை
x

தென்காசி அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தென்காசி

தென்காசி அருகே ஆய்க்குடி அகரக்கட்டைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் கடந்த 6-8-2016 அன்று மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக கட்டிட வேலைக்கு சென்ற இளம்பெண்ணை அவதூறாக பேசி, கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து ஆய்க்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தார். இந்த வழக்கு நெல்லை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றம் சாட்டப்பட்ட இசக்கிமுத்துவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இதில் ரூ.8 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார். வழக்கை திறம்பட நடத்தி குற்றம் சாட்டப்பட்ட இசக்கிமுத்துக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, ஏட்டு முருகேஷ்வரன் மற்றும் போலீசாரை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பாராட்டினார்.


Next Story