2 வாலிபர்கள் கைது


2 வாலிபர்கள் கைது
x

மீன் வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சமாதானபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 26). மீன் வியாபாரியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ் மகன் முருகேசன் (28), மாயாண்டி மகன் சுடலைமணி (24) ஆகியோருக்கும் வியாபாரம் ரீதியாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகதீசை முருகேசன், சுடலைமணி ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முருகேசன், சுடலைமணி ஆகியோரை கைது செய்தனர்.


Next Story