கேரள இளம்பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது


கேரள இளம்பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரள இளம்பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரள இளம்பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கேரள சுற்றுலா பயணி

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம். இவருடைய மனைவி எம்சிலா ஷெரின் (வயது 25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அஸ்லாம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் ஊட்டியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். நேற்று அரசு தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்தனர்.

பூங்காவில் சுற்றி பார்த்து கொண்டிருந்த போது, அங்கிருந்த வாலிபர்கள் 2 பேரை பார்த்து எம்சிலா ஷெரின் சிரித்ததாக கூறப்படுகிறது‌. இதனால் தங்களை பார்த்து கிண்டல் செய்வதாக நினைத்து வாலிபர்கள் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அவர்கள் எம்சிலா ஷெரினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தகராறாக மாறியது. தொடர்ந்து வாலிபர்கள், எம்சிலா ஷெரினை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

இதுகுறித்து எம்சிலா ஷெரின் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்த பிஜூ (34), சிபு (34) என்பதும், இவர்கள் கேரளாவில் கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வந்ததும், தாவரவியல் பூங்காவில் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து பிஜூ, சிபு ஆகிய 2 பேர் மீது பொது இடத்தில் அவதூறாக பேசுதல், கையால் தாக்குதல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story