தியேட்டர் மேலாளரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்கள் கைது
தியேட்டர் மேலாளரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் தியேட்டர் ஒன்று உள்ளது. இதில் கடந்த 26-ந் தேதி இரவு புதுக்கோட்டை காந்திநகரை சேர்ந்த முகிலன் (வயது 28), காமராஜபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (28) ஆகிய 2 பேரும் டிக்கெட் எடுக்காமல் தியேட்டருக்குள் படம் பார்க்க நுழைய முயன்றனர்.
அப்போது தியேட்டர் ஊழியர் சம்பத், 2 பேரையும் தடுத்து நிறுத்தினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தியேட்டர் மேலாளர் மணிகண்டன் (26) வந்து தட்டிக்கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த முகிலன், விக்னேஷ் ஆகியோர் மணிகண்டனை தகாத வார்த்தையால் திட்டி அரிவாளால் வெட்டினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக மணிகண்டன் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகிலன், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story