கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது


கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
x

ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பார்சம்பேட்டை ரெயில்வே விளையாட்டு மைதானம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் புது ஓட்டல் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் ராஜா என்பவரது மகன் நெல்சன் மண்டேலா (வயது 25) என்பதும், கையில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதேபோல் இடையம்பட்டியை சேர்ந்த ராஜ்மோகன் என்பவரின் மகன் ஹரிஷ் (23) என்பவர் அங்குள்ள சுடுகாடு அருகே போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது தெரிந்தது.

இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story