கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது


கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
x

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள புதிய மேம்பாலம் கீழே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மீன்சுருட்டி அருகே உள்ள ராமதேவநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த குமார் மகன் விஜய் (வயது 27) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் 1¼ கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையின் அருகே உள்ள கொல்லாபுரம் பிரிவு சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பல்வாய்கண்டம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஜானகிராமன் (25) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story