சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது


சேலம் வழியாக சென்ற  ரெயிலில் கஞ்சா கடத்திய  2 வாலிபர்கள் கைது
x

சேலம் வழியாக சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சூரமங்கலம்,

ரெயில்களில் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு செல்லும் தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடி-சேலம் இடையே ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். ரெயில் பொம்மிடி அருகே வந்த போது முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகப்படும்படியாக கைப்பை ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ரெஹான் (வயது 19) மற்றும் ரகிபுல் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வெளி மாநிலத்தில் இருந்து 3 கிலோ கஞ்சாவை 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அங்கிருந்து கேரள மாநிலத்தில் கஞ்சாவை விற்பது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அவர்கள் இருவரையும் மற்றும் பறிமுதல் செய்த 3 கிலோ கஞ்சாவை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story