சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது


சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:15:51+05:30)

நாகூரில் சாராயம் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூரில் சாராயம் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

நாகூர் போலீசார், ஒக்கூர்-கடம்பங்குடி சாலை விளம்பாக்கத்தில் தற்காலிக சோதனைசாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.

அப்போது காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள் வைத்து இருந்த பையில் சாராயம் இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் ஆழியூர் தோப்பு தெருவை சேர்ந்த ராமசந்திரன் மகன் புருசோத்தமன் (வயது 29), ஆழியூர் கொத்தமங்களம் நடராஜன் மகன் நவீன்குமார் (22) என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருசோத்தமன், நவீன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story