இரும்பு வால்வு திருடிய 2 வாலிபர்கள் கைது


இரும்பு வால்வு திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இரும்பு வால்வு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இரும்பு வால்வு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர்களிடம் விசாரணை

நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று நாகூர் -திட்டச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் சந்தேகப்படும்படி ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.

இரும்பு வால்வு திருட்டு...

அதில் அவர்கள் பூதங்குடி கம்பர் தெருவை சேர்ந்த வீரமணி மகன் பூவரசன் (வயது 25) மற்றும் பூதங்குடி காலனி தெருவை சேர்ந்த பன்னீர் மகன் விஜய் (19) என்பதும், இவர்கள் இருவரும் பனங்குடியில் உள்ள சென்னை பெட்ரோலியம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு வால்வை திருடி வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் பூவரசன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் திருடி வந்த இரும்பு வால்வை பறிமுதல் செய்தனர்.


Next Story