மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது
x

காட்பாடியில் மோட்டார் சைக்கிள் திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

காட்பாடியில் பொறியியல் கல்லூரி மாணவர் அபினய்குமார் என்பவர் தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். இதனை நோட்டமிட்ட 2 பேர் மோட்டார் சைக்கிளை திருட முயன்றனர். அவர்களை மாணவர்கள் பிடித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

2 பேரிடம் சப்-இன்ஸ்பெக்டர் பால வெங்கட்ராமன் விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் காட்பாடி தாராபடவேடு குளக்கரை பகுதியை சேர்ந்த பாலா என்ற பலராமன், காட்பாடி பாரதி நகரை சேர்ந்த சீனு என்ற சீனிவாசன் என்றும் அவர்கள் மீது திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story