2 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது


2 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
x

காட்பாடியில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

காட்பாடி தாராபடவேடு குளக்கரை பகுதியில் வாலிபா்கள் கஞ்சா வைத்திருப்பதாக காட்பாடி போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்குசென்று பார்த்தபோது 2 வாலிபர்கள் கஞ்சாவை வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவர்கள் தாராபடவேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 21), ரகுமான் (25) என்று ெதரியவந்தது. பின்னா் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story