மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி
x

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

தென்காசி ஆர்.எஸ்.பாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது 26). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் மோட்டார் வாகன நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டலில் தங்கி இருந்து தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவை சேர்ந்தவர் முத்துமணி(30). இவரும் குருமூர்த்தி வேலை செய்யும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் நேற்று காலை இருவரும் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து புறப்பட்டனர். வன்னியம்பட்டி விலக்கு பகுதியை தாண்டி மில் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் இவர்கள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்த விபத்தில் காைர ஓட்டி வந்த கேரளா கொல்லம் பகுதியை சேர்ந்த மோரின், காரின் பின்னால் அமர்ந்திருந்த பீனா(57), அச்சன்குஞ்சு(64) ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story