2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலைய பகுதியில் 1 கிலோ 750 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வழக்கில் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் கிரசண்ட் நகரை சேர்ந்த பிரிகான் (வயது 35), நடுவக்குறிச்சியை சேர்ந்த சண்முகவேல் (31) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று சண்முகவேல், பிரிகான் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் கனகராஜ் நேற்று வழங்கினார்.