விளம்பார் ஏரியில் 20 ஏக்கர் பயிர்கள் அழிப்பு


விளம்பார் ஏரியில் 20 ஏக்கர் பயிர்கள் அழிப்பு
x

ஆக்கிரமித்து சாகுபடி செய்ததால் விளம்பார் ஏரியில் 20 ஏக்கர் பயிர்கள் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி ஒன்றியம் விளம்பார் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் நார்த்தங்கால் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியில் 80 ஏக்கரை விவசாயிகள் ஆக்கிரமித்து கரும்பு, நிலக்கடலை, மக்காச்சோளம், மாட்டுத்தீவனபுல் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்தனர். இதனால் விளம்பார் ஏரி சுருங்கியது. மழைக்காலத்தில் நீர்பிடிப்பும் குறைந்தது. சுருங்கிப்போன விளம்பார் ஏரியை மீட்க வேண்டும், ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த மாதம் 60 ஏக்கரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று மீதமுள்ள 20 ஏக்கரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதாவது அதில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அழிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து ஏரி முழுவதும் மீட்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த பணியின்போது கள்ளக்குறிச்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி, ஊராட்சி செயலாளர் பூமலை மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story