20 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


20 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

20 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக்கோட்டை பகுதியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அருப்புக்கோட்டை-பந்தல்குடி ரோட்டில் கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் ஒருவேனை சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் தலா 40 கிலோ கொண்ட 20 மூடை ரேஷன் அரிசி இருந்தது. இதனை தொடர்ந்து வேனுடன் ரேஷன்அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் வேன் மற்றும் அரிசி உரிமையாளர் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 21), வேன் டிரைவர் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கண்ணன் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story