வேலூர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 20 மாடுகள் பிடிப்பட்டன


வேலூர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 20 மாடுகள் பிடிப்பட்டன
x

வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 20 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

வேலூர்

வேலூர் அண்ணாசாலையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் 3-வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் அண்ணா கலையரங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் மற்றும் அண்ணா சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை பிடித்தனர்.

பின்னர் அவற்றை 3-வது மண்டல அலுவலகத்துக்கு ஓட்டி சென்றனர். அப்போது சில மாடுகள் மிரண்டு அங்கும் இங்குமாக ஓடின. சிறிதுநேர சிரமத்துக்கு பின்னர் அனைத்து மாடுகளையும் மாநகராட்சி ஊழியர்கள் மண்டல அலுவலக வளாகத்தில் கட்டி வைத்தனர்.

இதேபோன்று 4-வது மண்டலத்தில் சுற்றித்திரிந்த 2 மாடுகளை சுகாதார அலுவலர் முருகன் தலைமையிலான ஊழியர்கள் பிடித்தனர். மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story