கூடலூரில் ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


கூடலூரில் ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

நலத்திட்ட உதவிகள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் பல்வேறு இதர துறைகளின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூடலூரில் நேற்று நடைப்பெற்றது. கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் இருந்து பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியில் மாற்றுகுடியமர்வு செய்யப்பட்டுள்ள 151 நபர்களுக்கு பட்டா வழங்குதல் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி, பழங்குடியினருக்கு வீடு வழங்குதல், அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் வீடு வழங்குதல், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்குதல், சிறுபொறி எந்திரம் மற்றும் விதை வழங்குதல் என 465 பயணாளிகளுக்கு ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.20 கோடி

விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். விழாவில் 465 பயனாளிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக கூடலூர் ஆர்.டிஓ. முகமது குதரதுல்லா வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, நகர் மன்ற தலைவர்கள் பரிமளா, சிவகாமி, ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணை தலைவர் சகாதேவன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story