மாவட்ட தலைநகரங்களில் 20-ந்தேதி தர்ணா போராட்டம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 20-ந்தேதி தர்ணா போராட்டம் நடைபெறும் என அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் அறிவித்துள்ளது.
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 20-ந்தேதி தர்ணா போராட்டம் நடைபெறும் என அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் அறிவித்துள்ளது.
மாநாடு
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4-வது மாநில மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் சீதரன் தலைமை தாங்கினார். இதில் வரவேற்புக்குழு தலைவர் நாகை மாலி எம்.எல்.ஏ., அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் அன்பரசு, அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளன தலைவர் அஷோக்தூல், டி.என்.ஜி.பி.ஏ. துணைத்தலைவர் இளமாறன், பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 சதவீத அகவிலைப்படியை 1.1.2022 தேதி முதல் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வனகாவலர், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.7,850 ஆக வழங்க வேண்டும்.
20-ந்தேதி தர்ணா போராட்டம்
தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 80 வயதுக்கு தரக்கூடிய சலுகையான 10 சதவீத ஓய்வூதியத்தை உயர்த்தி தரவேண்டும் என்பதை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநாட்டில் 27 மாவட்டங்களில் இருந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.