20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். 4 கடைகளுக்கு தலா ரூ.5௦௦ வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், திண்டுக்கல் நகர் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். திண்டுக்கல் பஸ் நிலையம், நாகல்நகர், கடைவீதி, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது 4 கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த 20 கிலோ பிளாஸ்டிக் டம்ளர், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து 4 கடைகளுக்கும் தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அரசு தடை செய்த பிளாஸ்டிக் டம்ளர், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story