20 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


20 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x

சீர்காழியில் உள்ள கடைகளில் 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன

மயிலாடுதுறை

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கோவிலின் நான்கு புறங்களிலும் உள்ள உணவகங்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், டீக்கடைகள், பூக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் நேற்று வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம்மோகன், சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக், விக்னேஷ், ஜவகர்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அனைத்து கடைகளிலும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






Next Story