டெம்போவை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்


டெம்போவை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்
x

ஓசூரில் இருந்து குட்கா ஏற்றி வந்த டெம்போவை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பலை கன்னியாகுமரியில் போலீசார் பிடித்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி,

ஓசூரில் இருந்து குட்கா ஏற்றி வந்த டெம்போவை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பலை கன்னியாகுமரியில் போலீசார் பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

போலீசார் ரோந்து

கன்னியாகுமரி பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையம் பகுதியில் ஒரு வாலிபர் பதற்றத்துடன் சுற்றி திரிந்தார். அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் ஓசூரில் இருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை ஒரு மினி டெம்போவில் ஏற்றி ஓட்டி வந்துள்ளார்.

டெம்போ கடத்தல்

திருநெல்வேலி வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் டெம்போவை தடுத்து நிறுத்தியது. அந்த கும்பல் டிரைவருடன் டெம்போவை கடத்தி கன்னியாகுமரிக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர், டிரைவரை ஒரு விடுதியில் தங்க வைத்துள்ளனர். அத்துடன் அந்த கும்பல் டெம்போ உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அவர்களிடம் இருந்த டிரைவர் தப்பியோடி பஸ் நிலையத்தில் சுற்றிதிரிந்த போது போலீசில் சிக்கியது தெரிய வந்தது.

4 பேர் சிக்கினர்

இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று அங்கு தங்கியிருந்த 4 பேரை பிடித்தனர். அத்துடன் குட்காவுடன் கடத்தப்பட்ட டெம்போவையும் பறிமுதல் போலீஸ் நிலையம் ெகாண்டு வந்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குட்கா கொண்டு வந்த டெம்போவை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story