குளச்சல் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
குளச்சல் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளச்சல்,
குளச்சல் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல்
குளச்சல் காமராஜர் பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான அரசு மற்றும் மினி பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இந்தநிலையில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்தின் அருகிலேயே நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். மேலும் வெளியூருக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களும் பஸ் நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இரவில் திரும்பி வந்து எடுத்து செல்வார்கள்.
இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் அங்கு நிறுத்தியிருந்த 20 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.