20 மயில்கள் மர்ம சாவு
20 மயில்கள் மர்மமான இறந்தனர்.
திருச்சி
துறையூர்:
செத்துக்கிடந்த மயில்கள்
துறையூரை அடுத்த கரட்டாம்பட்டி கிராமத்தில் விவசாய நிலம் அருகே கரட்டுமலை அடிவாரப் பகுதியில் சுமார் 20 மயில்கள் செத்துக்கிடந்தன. இச்சம்பவம் குறித்து கரட்டாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வன் அளித்த புகாரின்பேரில் திருச்சி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, செத்துக்கிடந்த மயில்களை கைப்பற்றி, பரிசோதனை செய்தனர்.
அவற்றில் சில மயில்களை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 20 மயில்களில் 5 ஆண் மயில்களும், 15 பெண் மயில்களும் அடங்கும்.
வனத்துறையினர் விசாரணை
விவசாய நிலத்தில் விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டனவா? என்பது உள்ளிட்ட கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இடத்தில் 20 மயில்கள் செத்துக்கிடந்த சம்பவம் கரட்டாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story