புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 20 பேர் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக நேற்று மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கண்டாச்சிபுரம் அருகே கீழக்கொண்டூரை சேர்ந்த தனகோட்டி (வயது 68), காணை விஜயகுமார் (58), செஞ்சி அருகே கீழையூரை சேர்ந்த தமிழரசன் (38) உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story